Police stationpt desk
தமிழ்நாடு
கோவை: உறங்கச் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழப்பு – பரோட்டா சாப்பிட்டதுதான் காரணமா?
மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழப்பு. பரோட்டா சாப்பிட்டதுதான் காரணமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தியாளர்: பிரவீண்
கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாணவி கீர்த்தனா (21). இவர், கடந்த 30 ஆம் தேதி இரவு பரோட்டா சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றுள்ளார். பின்னர் அவரை நேற்று காலையில் வீட்டிலிருந்தவர்கள் எழுப்பியுள்ளனர். அப்போது அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
Deathpt desk
இதையடுத்து மாணவியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மாணவி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவி உயிரிழப்பு தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.