பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கு | தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிபதி பணியிட மாற்றம்!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கானது தமிழகத்தையே உலுக்கிய ஒரு கொடூர சம்பவமாக வெளிவந்தது. இவ்வழக்கு தொடர்பாக 9 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்துவருகின்றனர்.
இந்நிலையில் இவ்வழக்குக்கான இறுதி தீர்ப்பு வரும் மே 13-ம் தேதி அளிக்கப்படும் என தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் சிறிதுநேரத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி உட்பட சுமார் 77 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
மே13-ம் தேதி தீர்ப்பு.. வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
கோவை மகளிர் நீதிமன்றத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்குக்கான இறுதிகட்ட வாதங்கள் இன்று நிறைவடைந்தது. அதனைத்தொடர்ந்து வழக்குக்கான தீர்ப்பு வரும் மே 13-ம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் தற்போது வெளியாகியிருக்கும் அறிவிப்பின் படி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி உட்பட 77 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.