நகைகளை பார்த்து பார்த்து தேர்வு செய்த கொள்ளையன்.. கோவை நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் நடந்தது என்ன?

கோவையில் பிரபல நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டது எப்படி என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை நகைக்கடை கொள்ளை
கோவை நகைக்கடை கொள்ளைபுதிய தலைமுறை

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள அந்த நகைக்கடையில், கொள்ளையடித்த நபரின் நடவடிக்கைகள் விநோதமாக இருந்தது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்திருக்கிறது. கொள்ளையடிக்க வருவோர் மொத்தமாக ரேக்கில் இருந்து நகைகளை அள்ளிச்செல்வர். ஆனால், இந்த கடைக்குள் நுழைந்த கொள்ளையன், சட்டையால் தலையில் முக்காடு அணிந்து மைனர் செயின், பிரேஸ்லெட், வளையல், மோதிரம், ஆரம் என திருமணத்திற்கான நகைகளாக பார்த்து தேர்வு செய்து கொள்ளையடித்திருப்பது சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது.

சுமார் ஒருமணிநேரம் கடைக்குள்ளேயே கொள்ளையன் இருந்திருப்பதும் தெரிகிறது. முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் உள்ள நகைகள் மட்டுமே திருடப்பட்டுள்ளன. கொள்ளை தொடர்பாக கடை முழுவதும் நடத்திய சோதனையில், ஏசி வெண்டிலேட்டருக்காக போடப்பட்ட துளையில் புகுந்து, கடைக்குள்ளே சென்று நகை கொள்ளையில் ஈடுபட்டது சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

கொள்ளையன் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோப்ப நாய் சோதனையின் அடிப்படையில், கொள்ளையன் நகைக்கடையின் இடதுபுற பக்கவாட்டு சந்தில் நுழைந்து கடையின் பின்புறம் சென்று வலது மூலை வரை சென்று இருப்பது தெரிய வந்திருக்கிறது. அந்த பகுதியில் துளை இல்லாத நிலையில் அங்கிருந்த குழாய் வழியே ஏறி சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நகைக் கொள்ளையன் விட்டுச்சென்ற சட்டை, மாஸ்க், கையுறையைக் கொண்டும் காவல்துறையினர் விசாரணை நடத்துகிறார்கள். கொள்ளையன் Selective ஆக நகைகளை எடுத்துச் சென்றுள்ள நிலையில் விற்கவோ உருக்கவோ செல்லவில்லை என்றால் நெருங்குவது சிக்கல் என சொல்லப்படுகிறது.

ஐந்து தனிப்படைகள் விசாரணை நடத்திவரும் நிலையில் கொள்ளையனை விரைவில் நெருங்கிவிட முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் காவல்துறையினர்.

இதையும் படிக்க: ”நான் இருக்கிற வரை ஆட்டம் முடியாது” - தனியொருவனாக இந்திய அணியின் வெற்றியை தட்டிப்பறித்த மேக்ஸ்வெல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com