சேரன் ரயிலில் ஈஷா படம் அகற்றம்

சேரன் ரயிலில் ஈஷா படம் அகற்றம்

சேரன் ரயிலில் ஈஷா படம் அகற்றம்
Published on

சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ஈஷா மையத்தின் புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது.

அனைத்து விரைவு ரயில்களையும் நவீன ரக பெட்டிகளுடன் மாற்றுவதற்கான பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் தொடக்கமாக சமீபத்தில் கோவை-சென்னை சேரன் எக்ஸ்பிரஸில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் மாற்றி அமைக்கப்ட்ட ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்துள்ளன. 

இந்த சூப்பர் ஃபாஸ்ட் ரயில் பெட்டிகளில் கோவையின் அடையாளமாக ஈஷா யோகா மையத்தின் படம் ஒட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.‌  விரைவு ரயில் பெட்டிகளில் குறிப்பாக அந்தந்த மாவட்டத்தின் சிறப்புகள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்று வருவது வழக்கம். 

கோவை மாவட்டத்தின் சிறப்புகள் குறித்த புகைப்படத்திற்கு பதிலாக சேரன் எக்ஸ்பிரஸில் ஈஷா மையத்தின் புகைப்படம் இடம்பெற்றிருப்பதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த புகைப்படங்களை நீக்கிவிட்டு கோவையின் பாரம்‌பரியத்தை விளக்கும் படத்தை வைக்க வேண்டும் என கோரிக்கை‌ எழுந்தது. இந்நிலையில், சேரன் எக்ஸ்பிரஸில் ஈஷா மையத்தின் புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com