”இப்போதுதான் நிம்மதி அடைந்தோம்” - பிடிபட்டது கோவையில் 5 நாட்களாக போக்கு காட்டிய சிறுத்தை!

”இப்போதுதான் நிம்மதி அடைந்தோம்” - பிடிபட்டது கோவையில் 5 நாட்களாக போக்கு காட்டிய சிறுத்தை!
”இப்போதுதான் நிம்மதி அடைந்தோம்” - பிடிபட்டது கோவையில் 5 நாட்களாக போக்கு காட்டிய சிறுத்தை!

கோவை குனியமுத்தூரில், போக்கு காட்டிய சிறுத்தையை வனத்துறையினர் பிடித்ததில், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கடந்த ஒன்றரை மாதங்களாக குனியமுத்தூரில் பிகே புதூர் பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்தது. இந்த சிறுத்தை கடந்த திங்கட்கிழமை அங்கிருந்து பாழடைந்த கிடங்கு ஒன்றில் புகுந்தது. கிடங்கில் சிறுத்தை இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர் அதனை பிடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர். சிறுத்தை புகுந்த கிடங்கு ஆறு அறைகளை கொண்டதாக இருந்தது. ஒவ்வொரு அறைக்கும் இடையே சுவர் இருந்ததால் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிப்பதில் நடைமுறை சிரமங்கள் இருந்தன.

கிடங்கின் நுழைவாயில்களில் கூண்டு வைத்து காத்திருந்தும் 5 நாட்களாக சிறுத்தை பிடிபடாமல் போக்கு காட்டி வந்தது. 5 நாட்களாக உணவு, தண்ணீரின்றி தவித்த சிறுத்தை நள்ளிரவு கிடங்கில் வைக்கப்பட்ட கூண்டுக்குள் நுழைந்தது. அதனை வனத்துறையினர் லாவகமாக சிறை பிடித்தனர். சிறுத்தை பிடிபட்டிருப்பது பி.கே. புதூர் மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறது.

கூண்டுக்குள் பிடிபட்ட சிறுத்தையின் உடல்நிலை வனத்துறை மருத்துவர்களால் ஆய்வு செய்யப்பட்டது. ஐந்து நாட்கள் சாப்பிடாமல் இருந்ததைத்தவிர சிறுத்தை ஆரோக்கியமாக இருந்தது தெரியவந்தது. உணவு, தண்ணீர் கொடுத்து சிறுத்தையை தேற்றியபின், டாப் ஸ்லிப்பில் அடர்ந்த வனப்பகுதிக்குள் சிறுத்தை விடப்பட்டது.

கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்டதும் சிறுத்தை உற்சாகத்துடன் குதித்தோடியது. இந்த காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com