கோவையில் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேரிடர் பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு 27 வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆலாந்துறை போலிசார் ஆறுமுகம் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களின் விசாரணைக்குப் பிறகு ஆறுமுகத்தை கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் பொறுப்பு நீதிபதி ஞானசம்பந்தம் முன்பு ஆஜர் படுத்தினர். இதனையடுத்து அவரை வரும் 27 தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதை அடுத்து ஆறுமுகத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். முன்னதாக ஆறுமுகத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க 7 நாட்கள் அனுமதி கோரிய மனுவை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.