உணவு தேடி ஊருக்குள் உலாவரும் யானைக் கூட்டம்
உணவு தேடி ஊருக்குள் உலாவரும் யானைக் கூட்டம்pt desk

கோவை: உணவு தேடி ஊருக்குள் உலாவரும் யானைக் கூட்டம் - வனத்துறை எச்சரிக்கை... அச்சத்தில் பொதுமக்கள்...

கோவை கணுவாய் அடுத்த திருவள்ளுவர் நகரை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் யானைகள் கூட்டமாக உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: பிரவீண்

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்களில் யானைகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில், தோட்டங்களில் உணவு தேடி அலைகின்றன. அந்த வகையில் கணுவயை அடுத்த திருவள்ளுவர் நகரில் இருந்து சோமையனூர் செல்லும் சாலையில் யானைகள், குட்டிகளுடன் கூட்டமாக நடமாடின. இதனை அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

உணவு தேடி ஊருக்குள் உலாவரும் யானைக் கூட்டம்
உணவு தேடி ஊருக்குள் உலாவரும் யானைக் கூட்டம்pt desk

இதனிடையே இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கவனத்துடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதே சமயம் இரவு நேரங்களில் ஆட்டோ வாடகைக்கு செல்வோர் கடும் அச்சத்துடன் சவாரி செல்ல வேண்டி உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

உணவு தேடி ஊருக்குள் உலாவரும் யானைக் கூட்டம்
இலங்கை | பழைய வழக்குகளைத் தோண்டியெடுக்கும் புதிய அரசு.. கருணா அம்மானுக்கு சிக்கல்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com