தமிழ்நாடு
கோவை பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கு.. தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
கோவை பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கு.. தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கோவையில் கடந்த 2010-ஆம் ஆண்டு சிறுமி முஸ்கான் மற்றும் அவரது தம்பி ரித்திக் ஆகியோர் கடத்தி கொல்லப்பட்டனர். இதில் சிறுமி பாலியல் வன்கொடுமையும் செய்யப்பட்டிருந்தார்.
இவ்வழக்கில் தொடர்புடைய மோகனகிருஷ்ணன் என்பவர் போலீசாரால் என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய மற்றொரு நபரான மனோகரனின் தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது.