`மின்சார கண்ணணுக்கு...’- அமைச்சருக்கு கோவை திமுக-வினர் ஒட்டிய நூதன பிறந்தநாள் போஸ்டர்!

`மின்சார கண்ணணுக்கு...’- அமைச்சருக்கு கோவை திமுக-வினர் ஒட்டிய நூதன பிறந்தநாள் போஸ்டர்!
`மின்சார கண்ணணுக்கு...’- அமைச்சருக்கு கோவை திமுக-வினர் ஒட்டிய நூதன பிறந்தநாள் போஸ்டர்!

கோவையில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, `Happy Birth Day மின்சார கண்ணா’ என போஸ்டர் அடித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள் கோவை மாவட்ட திமுகவினர்.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று 47வது பிறந்த நாள் காண்கிறார். அவருக்கு அமைச்சர்கள் அரசு அலுவலர்கள், ஆதரவாளர்கள், திமுக கட்சியினர், பொதுமக்கள் என பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகரில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் குறிப்பிட்ட ஒரு கேப்ஷனுடன் பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த கேப்ஷன், அவரது துறையை குறிபிட்டு காட்டும் வகையில் உள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருப்பது இதுதான் - "Happy Birth Day மின்சார கண்ணா". இதில் திமுக-வின் முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் புகைப்படம், தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி மலர் கொத்து அளித்த புகைப்படம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உட்பட கோவை மாநகர திமுக நிர்வாகிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த போஸ்டர்கள் கோவை மாநகரில் உக்கடம், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com