தமிழ்நாடு
பேரூர் படித்துறை அருகே தற்காலிகப் பாலம் சேதம் - போக்குவரத்து பாதிப்பு
பேரூர் படித்துறை அருகே தற்காலிகப் பாலம் சேதம் - போக்குவரத்து பாதிப்பு
கோவையில் பேரூர் படித்துறை அருகே தொடர்மழை காரணமாக தற்காலிக தரைப்பாலமும் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை அடுத்த பேரூர், வீரகேரளம் மற்றும் வேடப்பட்டி பகுதிகளை இணைக்கும் தரைப்பாலம் நொய்யாலாற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக சேதமடைந்தது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், வடகிழக்கு பருமழை தீவிரமடைந்துள்ளதால் நொய்யலாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தற்காலிக தரைப்பாலமும் அடித்து செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.