கோவை: திடீரென மோசமான உடல்நிலை.. வெள்ளியங்கிரி மலைக்குச் சென்ற பக்தருக்கு நேர்ந்த பரிதாபம்

கோவையில் வெள்ளியங்கிரி மலைக்குச் சென்ற பக்தர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.
Kiran
Kiranpt desk

செய்தியாளர் : பிரவீண்

கோவையில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவன் கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அப்படி கோவை வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் (22) என்பவர் தனது நண்பர்களுடன் அதிகாலை வெள்ளியங்கிரி மலைக்கு சென்றுள்ளார். அப்போது 5வது மலை ஓட்டன் சமாதி அருகே கிரண் சென்ற போது உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.

Death
DeathFile Photo

இதையடுத்து கிரணின் நண்பர்கள் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக பூண்டி அடிவார பகுதியில் இருந்த சுமை தூக்கும் தொழிலாளர்களோடு அங்கு வந்து, கிரணை மீட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிரண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com