டிராபிக் போலீசாரை விமர்சித்து இன்ஸ்டாவில் வீடியோ; கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது வழக்குப் பதிவு

போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரைக் கடுமையாக விமர்சித்து தனது instagram பக்கத்தில் வீடியோ பதிவிட்ட கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை ஷர்மிளா
கோவை ஷர்மிளா PT WEB

கோவையில் கடந்த 2 ஆம் தேதி சத்திரோடு சங்கனூர் சிக்னல் சந்திப்பில் C1 காவல்நிலைய போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி என்பவர் பணியில் இருந்து போது, கோவை ஷர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கேட்ட உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரியை, கடுமையாக விமர்சித்து தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

இந்தநிலையில் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி கோவை மாநகர சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் IPC 506, 509, 66C information technoloy act உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் எனப் பிரபலமான ஷர்மிளாவை அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பேருந்திற்கே சென்று நேரில் சந்தித்து வாழ்த்தினர். தூத்துக்குடி எம். பி. கனிமொழி இவர் இயக்கிய பேருந்தில் பயணம் செய்த அன்றே, பணியில் இருந்து நீக்கப்பட்டதாக ஒரு சர்ச்சை எழுந்தது. அப்போது ஓட்டுநர் பணி இழந்த ஷர்மிளாவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கார் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com