கோவை: சாலைகளில் குண்டு குழியா? - வாட்ஸ்அப் மூலமே புகாரளிக்கலாம்

கோவை: சாலைகளில் குண்டு குழியா? - வாட்ஸ்அப் மூலமே புகாரளிக்கலாம்
கோவை: சாலைகளில் குண்டு குழியா? - வாட்ஸ்அப் மூலமே புகாரளிக்கலாம்

கோவையில் தரமற்ற சாலைகளை சரிசெய்ய வாட்ஸ்அப் மூலம் முறையிட வழி செய்யும் வசதியை மாநகராட்சி சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவையில் சாலைகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள 200 கோடி ரூபாயை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. இதையடுத்து குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரி செய்யும் பணியை மாநகராட்சி நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் பகுதி சாலைகள் சீரற்று இருந்தால் அதை படம் எடுத்து 81476 84653 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு லொகேஷனுடன் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்புகார் கிடைக்கப்பெற்றவுடன் பிரத்யேக இயந்திரம் உதவியுடன் சாலையில் உள்ள குழிகள் சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் புகார்களின் நிலை என்ன என்பது குறித்து மக்கள் அவ்வப்போது தெரிந்துகொள்ள முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனை முறையில் சில வார்டுகளில் இம்முயற்சி செயல்படுத்தப்படுவதாகவும், இது வெற்றிபெற்றால் அனைத்து வார்டுகளுக்கும் இவ்வசதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com