”கோவை விபத்து குறித்து தமிழக முதல்வர் வாய் திறக்காதது ஏன்?” - வானதி சீனிவாசன் கண்டனம்

”கோவை விபத்து குறித்து தமிழக முதல்வர் வாய் திறக்காதது ஏன்?” - வானதி சீனிவாசன் கண்டனம்
”கோவை விபத்து குறித்து தமிழக முதல்வர் வாய் திறக்காதது ஏன்?” - வானதி சீனிவாசன் கண்டனம்

கோவையில் கார் வெடி விபத்து குறித்து தமிழக முதல்வர் வாய் திறக்காதது மிகவும் கண்டனத்திற்கு உரியது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் சிலிண்டர் வெடித்த இடத்தில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “சிலிண்டர் வெடித்து பயங்கரவாத தாக்குதல் நடத்தும் முயற்சி இறைவன் அருளால் தடுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்களை கொல்லும் சதி கோவில் வாசலில் முறியடிக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கு நன்றி சொல்ல வழிபாடு செய்தோம்” என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “சாதாரணமாக நடைபெறும் சம்பவங்களுக்கு, செயல்களுக்கு கூட கருத்து சொல்லும் அரசியல்வதிகள் யாரும் கோவை வர வில்லை. கோவை மக்களுக்கு இந்த மாதிரியான செயல்களுக்கு துணை இருக்க மாட்டோம் என உணர்த்த வந்திருக்க வேண்டாமா?. காவல்துறையை தனது கட்டிப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர், கோவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், அந்த இடத்தை பார்க்கக் கூட வராது கண்டனத்திற்குரியது. கோவையை இன்னும் பழி வாங்கும் நோக்குடன் முதல்வர் இருக்கின்றாரா என்ற கேள்வி எழுகின்றது.

உளவுத்துறை முழுவதும் செயல் இழந்திருக்கின்றது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இந்த இடத்தில் வெடிக்க வைக்க முயன்று இருக்கின்றனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் முதல்வர் கௌரவம் பார்க்கக் கூடாது. 

சர்தேச அளவில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதால், இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த சம்பவம் பற்றி தீர விசரித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பா.ஜ.க நிர்வாகிளுடன் ஆலோசனை செய்த பின் கட்சி தலைவருடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

முதல்வர் மற்றும் சில முக்கிய அமைச்சர்களை மேடையில் வைத்துக் கொண்டு இந்த ஆட்சி மைனாரிட்டி மக்கள் போட்ட பிச்சை என கூறுகின்றனர். மைனாரிட்டி ஓட்டுக்காக பிற மக்களின் உயிரை பலி கொடுக்க போகின்றாரா முதல்வர்?. பொதுமக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக கூட முதல்வர் பேச வில்லை. திருமாவளவன், சீமான், கம்யூனிஸட் கட்சி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஏன் இதில் அமைதியாக இருக்கின்றனர்?.

காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் சரியாக உத்தரவுகளை முதல்வர் பிறப்பிக்க வேண்டும். ஓட்டுக்களை எல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்.  இப்போது மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும். அதற்காக களத்தில் இறங்க வேண்டும்.மத்திய அரசின் அரசியலுடன் மோதுங்கள், மக்களின் உயிருடன் விளையாடாதீர்கள்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com