கோவை: சிறுவனை சுற்றிவளைத்த நாய்கள்.. நொடிப்பொழுதில் காப்பாற்றிய தந்தை.. பதைபதைக்க வைக்கும் வீடியோ

கோவையில் சிறுவனை சுற்றிவளைத்த தெரு நாய்களிடமிருந்து நொடிப்பொழுதில் காப்பாற்றிய தந்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
street dogs
street dogspt desk

செய்தியாளர்: பிரவீண்

கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த நபர் இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தனது மகனை இறக்கி விட்டு விட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் இருந்த நான்கு தெரு நாய்கள் குழந்தையை நோக்கி ஓடிவந்துள்ளது. இதனை பார்த்த அந்த சிறுவன் அச்சமின்றி கீழே கிடந்த கல்லை எடுத்து நாய்களை விரட்ட முயன்றுள்ளார். ஆனால், அதற்கெல்லாம் அஞ்சாத தெரு நாய்கள் நொடிகளில் சிறுவனை சுற்றி வளைத்துள்ளது.

Street dogs
Street dogspt desk

இதையடுத்து சிறுவன் கூச்சலிட்டுள்ளான். கூச்சல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் சென்ற தந்தை ஓடி வந்து சிறுவனை மீட்ட நிலையில், அங்கிருந்து தெரு நாய்கள் வந்த வேகத்தில் திரும்பின.

இந்த காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், சிறுவன் நான்கு தெரு நாய்கள் வருவதைப் பார்த்து கல்லை எடுப்பதும், நொடிகளில் தெரு நாய்கள் சிறுவனை சுற்றி வளைப்பதும், அச்சத்தில் இருந்த சிறுவனை நொடிப் பொழுதில் தந்தை காப்பாற்றுவதும் தெளிவாக பதிவாகியுள்ளது.

street dogs
சிதம்பரம்: விவசாயி வீட்டில் பதுங்கியிருந்த ஜோடி பாம்புகள் - பிடிக்க முற்பட்டபோது சீறியதால் பரபரப்பு

தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அண்மைக்காலமாக தெரு நாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் நிலையில், குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com