சென்னை அசோக் நகர் 11வது தெருவில் 11 பேருக்கு கொரோனா உறுதி
சென்னை அசோக் நகர் 11வது தெருவில் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்கச் சென்றவர்கள் உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170-ஐ கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் 174 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். நேற்று முன் தினம் ஒரே நாளில் சென்னையில் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று சென்னை பெரிய மேட்டில் 7 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது சென்னை அசோக் நகர் 11வது தெருவில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று காய்கறி வாங்கியவர்கள், அதே பகுதியல் தற்காலிக காய்கறி கடையில் காய் வாங்கியவர்கள் என 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.