\
கோவை, நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை

கோவை, நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை

கோவை, நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை
Published on

நீலகிரி, கோவை மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்றால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என குறிப்பிட்டுள்ளது. வட மேற்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 23 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com