ரயில் முன் பாய்ந்த முதியவர்.. துண்டானது கால்.. கோவையில் பரபரப்பு சம்பவம்

ரயில் முன் பாய்ந்த முதியவர்.. துண்டானது கால்.. கோவையில் பரபரப்பு சம்பவம்

ரயில் முன் பாய்ந்த முதியவர்.. துண்டானது கால்.. கோவையில் பரபரப்பு சம்பவம்
Published on

கோவையில் ரயில் எஞ்சின் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற முதியவரின் கால் துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மத்திய ரயில் நிலையத்தில் தினந்தோறும் ஏராளமான ரயில்கள் வந்து செல்கின்றன. இதே போல ரயிலில் பயணம் செய்ய ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கேரளா செல்லும் ரயில், கோவை ரயில் நிலையத்தில் வந்துள்ளது. அப்போது நடை மேடையில் நின்றிருந்த 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் அந்த ரயில் எஞ்சின் முன்பு பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில், அவரது கால் தண்டவாளத்தின் இடையே சிக்கிக் கொண்டது.

இதனிடையே எட்டு ரயில் பெட்டிகளை கடந்த பின்பு ரயிலை நிறுத்தியுள்ளனர். இதில், முதியவரின் கால் துண்டாகி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொன்றிருந்தார். அவரை அங்கிருந்த பயணிகள் மற்றும் ரயில்வே போலீசார் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் முதியவர் கோவை வடவள்ளியை சேர்ந்த மகேஷ் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவ குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com