கோவை: ஊருக்குள் நுழைந்த காட்டுயானை கூட்டம்: வாழைத் தோட்டத்தில் புகுந்து அட்டூழியம்

கோவை: ஊருக்குள் நுழைந்த காட்டுயானை கூட்டம்: வாழைத் தோட்டத்தில் புகுந்து அட்டூழியம்
கோவை: ஊருக்குள் நுழைந்த காட்டுயானை கூட்டம்: வாழைத் தோட்டத்தில் புகுந்து அட்டூழியம்

ஓணாப்பாளையம் அருகே வாழைத்தோட்டத்தில் புகுந்து இரவு முழுவதும் காட்டுயானை கூட்டம் அட்டூழியம் செய்தன.

கோவை ஓணாப்பாளையம் அருகே வேணுகோபால் - மலர்கொடி தம்பதியரின் விவசாய நிலத்தில் தனது குட்டியுடன் புகுந்த காட்டுயானை கூட்டம், அங்கு 3 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியதோடு முதிர்ந்த பாக்கு மரங்களையும் முறித்து சேதப்படுத்தியது.

இதையடுத்து விடிய விடிய அங்கேயே முகாமிட்டிருந்த யானைகள் அதிகாலை ஐந்து மணியளவில் மலைப் பகுதியை நோக்கி சென்றது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று முறை இவரது விவசாய நிலத்தில் புகுந்து அட்டகாசம் செய்த காட்டுயானை கூட்டம், மீண்டும் வர வாய்ப்பிருப்பதாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து யானைகளின் வழித்தடங்கள் மறிக்கப்பட்டுள்ளதால் அவை பாதைமாறி ஊருக்குள் நுழைந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com