கோவை: பாஜக நிர்வாகியை கடுமையாக தாக்கிய உணவக பவுன்சர்கள்! வைரல் வீடியோ

கோவை: பாஜக நிர்வாகியை கடுமையாக தாக்கிய உணவக பவுன்சர்கள்! வைரல் வீடியோ
கோவை: பாஜக நிர்வாகியை கடுமையாக தாக்கிய உணவக பவுன்சர்கள்! வைரல் வீடியோ

கோவையில் பாஜக நிர்வாகியை ஹோட்டல் பவுன்சர்கள் கடுமையாக தாக்கும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஹோட்டலில் கடந்த 11-ஆம் தேதி நடந்த நடன நிகழ்விற்கு பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன் மற்றும் அவரது நண்பர்கள் சென்றனர். அப்போது ஜோடிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் ஹோட்டல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறு ஈடுபட்ட நிலையில், ஹோட்டல் நிர்வாகத்தின் சார்பில் கணக்காளர் விஷ்வபாரதி ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஜான்சன் மற்றும் அவருடன் வந்த லட்சுமணன், டேவிட்,ஜெரிஷ் ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் ஹோட்டலுக்கு வந்த பாஜக நிர்வாகி மற்றும் அவரது நண்பர்களை ஹோட்டல் ஊழியர்களும், பவுன்சர்களும் சேர்ந்து தாக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. பா.ஜ.க கட்சி கொடியுடன் கார் இருக்கும் நிலையில் அதில் வந்தவர்களை பவுன்சர்கள் தாக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com