கோவை: பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! பாஜகவினர் சாலை மறியல்!

கோவை: பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! பாஜகவினர் சாலை மறியல்!
கோவை: பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! பாஜகவினர் சாலை மறியல்!

கோவை மாநகர பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தொண்டர்கள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகரத்தில் இருக்கும் பாஜக கட்சி அலுவலகத்தின் மீது மர்மமான முறையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனையிடையே குற்றவாளிகளை கண்டறிய கூறி பாஜக கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஒப்பணக்கார வீதி பகுதியிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அது பெட்ரோல் குண்டு இல்லை மண்ணெண்ணெய் விளக்கு என்ற தகவலும் பரவி வருகிறது. இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com