திருப்பூர்: சைவ உணவக சாம்பாரில் இருந்த கரப்பான் பூச்சி – பெண் வாடிக்கையாளர் அதிர்ச்சி

திருப்பூரில் உணவகம் ஒன்றில் வாடிக்கையாளருக்கு ஊற்றிய சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
சாம்பாரில் கரப்பான் பூச்சி
சாம்பாரில் கரப்பான் பூச்சி pt desk

செய்தியாளர்: சுரேஷ்குமார்

திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள நியூ அன்னபூர்ணா உணவகத்தில் இன்று ஒரு குழுவினர் இணைந்து சாப்பிட சென்றுள்ளனர். அப்போது அதில் ஒரு பெண்மணிக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது.

சாம்பாரில் கரப்பான் பூச்சி
சாம்பாரில் கரப்பான் பூச்சி

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உணவக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. உயர்தர சைவ உணவகம் என கூறப்படும் பல உணவகங்கள் முறையாக பராமரிப்பின்றி உணவுகள் பரிமாறப்படுவதாகவும் உடனடியாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அனைத்து உணவுகளிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Restaurant
Restaurantpt desk

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பாரில் கரப்பான் பூச்சி
ஜப்பான் | வேகமாக பரவி வரும் சதைகளை தின்றும் பாக்டீரியா; அறிகுறிகள் என்னென்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com