\
சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது - டிடிவி தினகரன்

சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது - டிடிவி தினகரன்

சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது - டிடிவி தினகரன்
Published on

சசிகலா தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இன்று அவரை டிடிவி தினகரன் சந்தித்தார்.

அவரிடம் அதிமுகவுடன் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுப்பியதற்கு ‘தேர்தலில் அமமுக போட்டியிடும்’ என்றார். மேலும் பேசிய அவர், “ வருகிற 10 தேதி அமமுக வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்படுவர். சலசலப்புகெல்லாம் நான் அஞ்சமாட்டேன். 

அமமுக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கூட்டணி குறித்து சில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் அதற்கு வடிவம் கிடைத்துவிடும். கூட்டணி வைப்பது உறுதி.” என்றார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com