நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி: தூத்துக்குடியில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி: தூத்துக்குடியில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி: தூத்துக்குடியில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் உற்பத்தி செய்யும் 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் நாள்தோறும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. நாள்தோறும் 5 பிரிவுகளிலும் முழு அளவில் மின் உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் 25 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும்.

கோடைக்கால மின்சார தேவைக்காக ஐந்து பிரிவுகளிலும் முழு மின் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில், நிலக்கரியின் கையிருப்பு தட்டுப்பாட்டால் ஐந்து பிரிவுகளிலும் முழு மின் உற்பத்தி செய்வது கடந்த ஒரு மாதமாக தடைபட்டுள்ளது.

இதனால், அனல் மின் நிலையத்தில் நான்கு அல்லது மூன்று பிரிவுகளே இயக்கப்பட்ட நிலையில், தற்போது நிலக்கரி தட்டுப்பாட்டால் நேற்று 4 அலகுகள் நிறுத்தப்பட்டு ஒரு அலகில் மட்டுமே 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலையும் 2, 3, 4, 5 ஆகிய பிரிவுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்றாவது பிரிவில் மட்டுமே 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து அனல் மின் நிலையத்தில் தற்போது 40 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி தற்போது போதுமான அளவு கிடைக்கிறது எனவும், சென்னை மின் பகிர்மான தலைமை அலுவலகத்தில் இருந்து அடுத்த தகவல் வரும் வரையிலும் ஒரு பிரிவில் மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக அனல் மின் நிலையத்தின் தலைமை பொறியாளார், கிருஷ்ணகுமார் தொலைபேசியில் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com