நிலக்கரி தட்டுப்பாடு: தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

நிலக்கரி தட்டுப்பாடு: தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
நிலக்கரி தட்டுப்பாடு: தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மூன்று பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

கோடைக்காலம் காரணமாக நாடு முழுவதும் மின்சாரத் தேவை அபரிமிதமாக அதிகரித்துள்ளது. ஆனால், மின் தேவைக்கேற்ப பல மாநிலங்களில் நிலக்கரி கையிருப்பு குறைவாக உள்ளதால் மின்சார விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 பிரிவுகள் உள்ளன. இதன் மூலம் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்சார உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒன்று, மூன்று மற்றும் ஐந்தாவது பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மற்றும் நான்காவது யூனிட்டுகள் மட்டும் தற்போது இயங்கி வரும் நிலையில், அதன் மூலம் 420 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. முன்னதாக, கடந்த 9-ம் தேதி நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, ரயில் மூலம் 4 ஆயிரம் டன் நிலக்கரியும், கப்பல் மூலமாக 55 ஆயிரம் டன் நிலக்கரியும் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com