\
விதிகளை மீறி தனிநபர் கடன் வழங்கல்: கூட்டுறவு சங்கச் செயலாளர் பணியிடை நீக்கம்

விதிகளை மீறி தனிநபர் கடன் வழங்கல்: கூட்டுறவு சங்கச் செயலாளர் பணியிடை நீக்கம்

விதிகளை மீறி தனிநபர் கடன் வழங்கல்: கூட்டுறவு சங்கச் செயலாளர் பணியிடை நீக்கம்
Published on
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் மணிராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கூட்டுறவு சங்க வங்கியின் உறுப்பினர்களான சக்தி, லட்சுமி ஆகியோருக்கு விதிகளை மீறி, தனிநபர் கடன் வழங்கியது தணிக்கையில் தெரியவந்தது. செயலாளர் மணிராஜின் பெயரிலும் நகைக்கடன் பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. விசாரணைக்கு பின் மணிராஜை பணியிடை நீக்கம் செய்து, வங்கியின் தலைவர் சுந்தர்ராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இதே வங்கியின் தொப்பூர் சேவை மைய காசாளர் வெங்கடேஷ், அடகு கடை நகைகளுக்கு ஒரே நபர் பெயரில் 2 கிலோ 42 கிராம் தங்கத்திற்கு 41 லட்சம் ரூபாய் கடன் கொடுத்ததால் ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்டார். அவரும், கூட்டுறவு வங்கியின் செயலாளர் மணிராஜும் நெருங்கி உறவினர்கள், இவர்கள் இணைந்தே விதிமீறி மோசடியாக பணம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com