”அரசியல் சட்டத்தை மாற்ற பாஜக துடிக்கிறது” - முதலமைச்சர் ஸ்டாலின்!

பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல்சட்டத்தை மாற்றத் துடிக்கிறது என தனது சமூக வலைதளப்பக்கத்தில் முதலமைச்சர் காட்டம்.
முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்முகநூல்

பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல்சட்டத்தை மாற்றத் துடிக்கிறது என தனது சமூக வலைதளப்பக்கத்தில் முதலமைச்சர் காட்டம்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது!

புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல்சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை!

பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல்சட்டத்தை மாற்றத் துடிக்கிறது!

நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது!

சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம்!” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, அம்பேத்கரின் 134வது பிறந்தநாளான இன்று, சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டமாமேதை அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
’ஒரே நாடு ஒரே தேர்தல்’ to ’3 கோடி ’பெண்களை லட்சாதிபதிகளாக்க இலக்கு’-பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

மேலும், , கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதை போல ஏப்ரல் 14 ஆம் தேதி ’சமத்துவ நாள்’ என அறிவித்ததை அடுத்து, இன்று அதற்கான "சமத்துவ நாள் உறுதிமொழி" யையும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஏற்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com