”நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்தில் பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின், இன்று கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், ”தமிழகத்தில் பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பருத்தி, நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழிலில் ஏற்பட்ட பாதிப்பை நீக்க நடவடிக்கை தேவை. இறக்குமதி வரி நீக்கம் உள்ளிட்டவை குறித்து நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். நூற்பாலை துறையில் மீண்டும் வேலைவாய்ப்பை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவிலிருந்து கழிவு பருத்தியை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும். நூற்பாலை சங்கம் உற்பத்தியை நிறுத்தும் அளவுக்கு நூல்களின் விலை உயர்வு கடும் நெருக்கடியை அளித்துள்ளது. அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தில் நூற்பாலைகளுக்கு நிதியுதவியை வழங்க வேண்டும்.

நூற்பாலை நிறுவனங்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்தும் காலத்தை மேலும் ஓராண்டு நீடிக்க வேண்டும். பருத்தி மீதான 11 சதவீதம் இறக்குமதி வரியை திரும்ப பெற வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com