\
உக்ரைனிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த கடைசி மாணவர்கள் குழு வருகை - முதல்வர் வரவேற்பு

உக்ரைனிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த கடைசி மாணவர்கள் குழு வருகை - முதல்வர் வரவேற்பு

உக்ரைனிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த கடைசி மாணவர்கள் குழு வருகை - முதல்வர் வரவேற்பு
Published on

உக்ரைனிலிருந்து மீட்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கடைசிக் குழுவை சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது. உக்ரைனில் சிக்கி தவித்த இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் மத்திய அரசின் உதவியுடன் மீட்கப்பட்டு வருகின்றனர். உக்ரைனில் சிக்கித் தவித்த ஆயிரத்து 860 மாணவர்களை இதுவரை மீட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் கடைசி குழுவினர் 9 பேர், ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். அவர்களை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து மாணவர்களிடம் உக்ரைனில் நடந்த விவரங்களை முதலமைச்சர் கேட்டறிந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com