கோவை மாணவி மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது - முதல்வர் ஸ்டாலின்

கோவை மாணவி மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது - முதல்வர் ஸ்டாலின்

கோவை மாணவி மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது - முதல்வர் ஸ்டாலின்
Published on

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் பள்ளியில் பயின்றுவந்த 17 வயது மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதில் தனியார் பள்ளியின் ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார். பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருவதையடுத்து பள்ளியின் முதல்வர்மீதும் போக்சோ சட்டத்தின்கீழ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாணவியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதிசெய்யவேண்டும். குற்றவாளிகளை கைதுசெய்து சட்டத்தின்முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com