
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்குமாறு பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், அதன் முதலீட்டாளர்கள், அந்நாட்டின் பிரதிநிதிகளை தமிழ்நாடு உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
செயல்திட்டத்தின்படி, தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிற்துறையின் உயர் அலுவலர்கள் ஆகியோர் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து வெளிநாடு பயணங்களை மேற்கொள்கின்றனர். இவர்களை போலவே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும், வரும் மே 23 ஆம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்லும் வகையில் பயணத்திட்டம் தயாராகியுள்ளது.
அந்நாடுகளுக்கு சென்று தமிழ்நாட்டில் மேலும் அவர்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து தெரிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்கின்றார்.