கான்வாய் செல்லும் வழியில் விபத்து - காரிலிருந்து இறங்கி நின்று விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

கான்வாய் செல்லும் வழியில் விபத்து - காரிலிருந்து இறங்கி நின்று விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
கான்வாய் செல்லும் வழியில் விபத்து - காரிலிருந்து இறங்கி நின்று விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை அண்ணா சாலையில் முதல்வர் வரும் வழியில் விபத்தில் சிக்கி காயம் அடைந்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார். 

இன்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து அண்ணா அறிவாலயம் வரும் வழியில், அந்த சாலையில் முன்னதாக சென்றுகொண்டிருந்த சூளைமேடு பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார். அங்கு இருந்த காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை ஒராமாக நடைபெற்று கொண்டிருந்த இந்த நிகழ்வைப் பார்த்து தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, வாகனத்தில் இருந்து கீழே இறங்கிச்சென்று அவருக்கு எப்படி விபத்து நடைபெற்றது? எங்கே காயம் ஏற்பட்டுள்ளது? என்பதை அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்பு உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி காவல் துறை அதிகாரிககளுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அருள்ராஜை அங்கிருந்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த பிறகு முதல்வர் அங்கிருந்து புறப்பட்டு அண்ணா அறிவாலயம் சென்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com