தமிழ்நாடு
கொடுத்த வாக்குறுதிகளில் 75 சதவீதத்திற்கும்மேல் நிறைவேற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொடுத்த வாக்குறுதிகளில் 75 சதவீதத்திற்கும்மேல் நிறைவேற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதை திமுக அரசு நோக்கமாக கொண்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கோவை மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக பரப்புரையில் ஈடுபட்டார். கோவையில் 300 இடங்களில் அகன்ற திரைகள் அமைக்கப்பட்டு பரப்புரையில் கலந்துகொண்டனர். இதில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கொடுத்த வாக்குறுதிகளில் 75 சதவிகிதத்துக்கு மேல் நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார்.

