`ரொம்ப திருப்தியா இருக்கு’- வடசென்னை மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின்

`ரொம்ப திருப்தியா இருக்கு’- வடசென்னை மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின்
`ரொம்ப திருப்தியா இருக்கு’- வடசென்னை மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின்

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

சென்னையில் 608 கோடி ரூபாய் மதிப்பில் 179.45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீர்வளம், நெடுஞ்சாலை, பொதுப்பணி ஆகிய துறைகளின் சார்பிலும் பன்னாட்டு நிதியுதவியுடன் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில், சென்னை துறைமுகம், திரு.வி.க.நகர், கொளத்தூர் தொகுதிகளில் நடைபெறும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பக்கிங்ஹாம் கால்வாய் இணைப்பு மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். பக்கிங்காம் கால்வாயை தூர்வாரும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

ஆய்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளிக்கும் அளவுக்கு பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். அப்போது அவர், “தென் சென்னையில் கடந்த வாரம் ஆய்வு செய்தேன். அங்கு மழை நீர் வடிகால் பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இப்போது வடசென்னையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது மழை விட்டுவிட்டு பெய்து வருவதால், பணிகள் சற்று மெதுவாக நடந்துவருகிறது. குறைந்தபட்சம் 15 நாள்கள் முதல் அதிகபட்சம் 30 நாள்களுக்குள் இந்தப் பணிகள் முடிவடைந்துவிடும். அந்த திருப்தி ஏற்பட்டுள்ளது எனக்கும். எவ்வளவு பெரிய மழை வந்தாலும், அதை சமாளிக்க முடியும் அளவுக்கு பணிகள் நடந்து வருகிறது” என்றார். 

தொடர்ந்து வால்டாக்ஸ் சாலைக்கு இடதுபுறம் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் போக்கு கால்வாய் மற்றும் மதகுகளில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகளையும் முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com