“பேனர் கலாசாரத்திற்கு திமுகவினர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” -முதல்வர் ஸ்டாலின்

“பேனர் கலாசாரத்திற்கு திமுகவினர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” -முதல்வர் ஸ்டாலின்

“பேனர் கலாசாரத்திற்கு திமுகவினர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” -முதல்வர் ஸ்டாலின்
Published on

உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பேனர் கலாசாராத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கட்சியினருக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழுப்புரத்தில் கட்சி கொடிக் கம்பம் நட முயன்றபோது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 13 வயதேயான சிறுவன் தினேஷின் மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், பேனர் கலாசாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களை பலமுறை கண்டித்த பின்னும் விரும்பத்தகாத செயல்கள் தொடர்வது வருத்தமடைய வைப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சிறுவன் தினேஷை இழந்து வாடும் குடும்பத்தினரின் துயரில் பங்கேற்று துணை நிற்பதாகவும், இனி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுப்பதே சிறுவனுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சி நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதை தாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததையும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை, கட்டளையாக ஏற்று திமுகவினர் செயல்படுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com