கலைஞர் 101 | முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதைட்விட்டர்

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது வழக்கம். அதன்படி இன்றும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். பின், நூற்றாண்டு விழா மலர் வெளியிட்டார்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

அதனைத் தொடர்ந்து "கலைஞர் நூற்றாண்டு நிறைவு நினைவலைகள்" என்ற பெயரில் சிறப்பு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார் முதல்வர்.

இந்த புகைப்படக் கண்காட்சியில் கலைஞரை நினைவு கூறும் வகையில் அவரது அரசியல் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் புகைப்படங்கள் பல வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வை தொடர்ந்து கலைஞரின் வரலாற்று நினைவு குறும்படத்தினை வெளியிட்டு பார்வையிட்டார். அவருடன் எம்.பி-கள் கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, சேகர்பாபு, கே.என்.நேரு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

அதனையடுத்து சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் திருவுருச்சிலைக்கு முதல்வர் மரியாதை செலுத்தினார். பின்பு கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் உள்ள கலைஞர் உருவ சிலைக்கும், பின்னர் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் உருவ சிலைக்கும் மரியாதை செலுத்தினார்.

முன்னதாக கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோபாலபுரம் இல்லத்தில், அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதி உருவபடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்கு முன்பு, அறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
“எந்த நாய் என்றாலும், அது மற்றவர்களை கடிக்கக்கூடும்; உரிமையாளர்கள் கவனம்” - ஆணையர் ராதாகிருஷ்ணன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com