மிக்ஜாம் பாதிப்பு | சென்னை பெருங்குடியில் நிவாரண உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சென்னை பெருங்குடியில் நிவாரண உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையில் பல பகுதிகள் இன்றும் நீரில் தத்தளிக்கின்றன. மக்களது இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இத்தகைய சூழலில் புயல் சென்னையை விட்டு விலகி தெற்கு ஆந்திரத்தின் பாபட்லா அருகே 100 கிலோமீட்டர் வேகத்தில் நேற்று கரையைக் கடந்துள்ளது.

pt desk

இந்நிலையில் மழையால் ஏற்ப்ட்ட பாதிப்புகளைக் கணக்கிடும் பணிகளும், சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமைச்சர்களும் அதிகாரிகளும் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்த வண்ணம் உள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மழை வெள்ள பாதிப்பு: தரமணியில் நிவாரண உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!

அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பெருங்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com