நவ., 1ல் கோயம்பேடு மற்றும் வேளச்சேரி மேம்பாலங்களை திறந்துவைக்கிறார் முதலமைச்சர்

நவ., 1ல் கோயம்பேடு மற்றும் வேளச்சேரி மேம்பாலங்களை திறந்துவைக்கிறார் முதலமைச்சர்
நவ., 1ல் கோயம்பேடு மற்றும் வேளச்சேரி மேம்பாலங்களை திறந்துவைக்கிறார் முதலமைச்சர்

நவம்பர் ஒன்றாம் தேதி திங்கட்கிழமை கோயம்பேடு மற்றும் வேளச்சேரி மேம்பாலங்களை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.

ஒரு கிலோ மீட்டர் தூரம் இந்த மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு இதற்காக ரூ.93.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி 2018 ஜூன் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. கொரோனா தொற்று பாதிப்பால் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து விரைவுபடுத்தப்பட்ட பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த மேம்பாலம் 4 வழிப்பாதையாக கட்டப்பட்டுள்ளது. ஜெய்நகர் பூங்காவில் தொடங்கி தேமுதிக அலுவலகம் முன்பு வரை கட்டப்பட்டுள்ளது. புதிய மேம்பால பணிகள் முழுமை அடைந்ததை அடுத்து அதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நவம்பர் ஒன்றாம் தேதி திங்கட்கிழமை கோயம்பேடு மற்றும் வேளச்சேரி மேம்பாலங்களை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com