\
மீனவரை மீட்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

மீனவரை மீட்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

மீனவரை மீட்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
Published on

இலங்கைக் கடற்படை விரட்டியபோது மூழ்கிய கப்பலில் இருந்த மீனவரை மீட்கக்கோரி அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையின் தாக்குதலில் மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கிய நிலையில் 2 பேர் காப்பாற்றப்பட்டனர். ஒருவரை தேடும்பணி நடந்துவருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளார். மேலும், மீட்கப்பட்ட மீனவர்களுக்கு மறுவாழ்வு அளித்திட நடவடிக்கை எடுக்கவும், மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com