பின் தங்கிய பிரிவினருக்கு நீட் பாதிப்பே! - முதல்வர் ஸ்டாலின் சொன்ன 'டேட்டா'

பின் தங்கிய பிரிவினருக்கு நீட் பாதிப்பே! - முதல்வர் ஸ்டாலின் சொன்ன 'டேட்டா'
பின் தங்கிய பிரிவினருக்கு நீட் பாதிப்பே! - முதல்வர் ஸ்டாலின் சொன்ன 'டேட்டா'

நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து இன்று சிறப்புக் கூட்டத்தைத் தமிழக அரசு சட்டமன்றத்தில் கூட்டியுள்ளது. அதில் பேசிய தமிழக முதல்வர் நீட் பற்றி ஏ.கே.ராஜன் கமிட்டி தந்த அறிக்கையை மேற்கோள்காட்டி பேசினார். அதன் முக்கிய தகவல்கள் இங்கே...

  • அரசு மருத்துவக் கல்லூரிகளில் நீட்-க்கு முன்பு சேர்ந்த CBSE மாணவர்களின் எண்ணிக்கை 0.11% மட்டுமே. 2020-21ல் அது 26.83%
  • நீட் -க்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரிகளின் 65% இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்குக் கிடைத்தது. 2020-21 ல் அது 43.13%ஆக குறைந்தது.
  • நீட் -க்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 61.45% இடங்கள் ஊரகப் பகுதி மாணவர்களுக்குக் கிடைத்தது. 2020-21ல் 50.81% ஆக குறைந்தது. சுயநிதிக் கல்லூரிகளில் சேரும் ஊரகப் பகுதி மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது.
  • நீட் தேர்வுக்கு முன்பு மறுதேர்வு எழுதி தேர்வானவர்களின் எண்ணிக்கை 8.12% மட்டுமே. நீட் தேர்வுக்குப் பிறகு அது 71.42% ஆக உயர்ந்திருக்கிறது.
  • போலவே, முதல்முறை தேர்வு எழுதி தேர்வானவர்களின் எண்ணிக்கை 91.81% இருந்து 28.58% ஆக குறைந்திருக்கிறது.
  • பொதுப் போட்டி ஒதுக்கீட்டில் இழந்துள்ள இடங்கள்:
    எம்.பி.சி மாணவர்கள் : 5%
    பி.சி பிரிவினர் : 3%
    எஸ்.சி பிரிவினர் : 1.6%

    இதைக் குறிப்பிட்டு, சமூகத்தில் பின் தங்கிய பிரிவினர் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டிருப்பது நிரூபணம் ஆகியிருப்பதாகக் குறிப்பிட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com