தமிழ்நாடு
மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அப்போலோ மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலினை, அமைச்சா துரைமுருகன் நேற்றைய தினமே நேரில் சந்தித்தார். இதையடுத்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார். ஒரு சில சோதனைகள் முடிந்தவுடன் அதிகாலை வீடு திரும்புவார்” என தெரிவித்திருந்தார்.

cm stalinpt desk
இந்நிலையில், பரிசோதனைகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும், தமிழக முதல்வா நலமுடன் இருப்பதாகவும் அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதையடுத்து பரிசோதனைகளை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வீடு திரும்பினார்.