“பாஜகவின் சாதித்தன்மை மனித குலத்திற்கு எதிரானது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

பாஜகவும் அதிமுகவும் நாணயம் இல்லாத நாணயத்தின் இருபக்கங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்pt web

தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் சமூக வலைதள தன்னார்வலர்கள் கூட்டம் சென்னை செனாய் நகரில் இன்று நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

ஐடி பிரிவு மட்டுமல்லாமல் கட்சி நிர்வாகிகள் அனைவரும் தகவல் தொழில்நுட்ப பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து முதல்வர் இந்தக்கூடத்தில் விளக்கினார். இதில், திமுக ஐடி பிரிவு செயலாளர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், தன்னுடைய பதிவுகளை லைக் செய்வதோடு மட்டுமல்லாமல் ஷேரும் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார் முதல்வர். இவ்விரு கட்சிகளும், நாணயமில்லா நாணயத்தின் இருபக்கங்கள் என்றும் கூறினார். இருகட்சிகளுமே வேறு வேறு அல்ல என்றும் கூறினார்.

பாஜக, இந்தியாவிற்கே கேடு என்றும் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய முழு தொகுப்பை, கீழே உள்ள லிங்க்-ல் காணலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com