“அதிபராக நினைக்கும் பிரதமருக்கு நாட்டைப்பற்றி கவலை இல்லை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாட்டின் அதிபராகும் முயற்சிகளில் பிரதமர் ஈடுபட்டிருப்பதாக சாடிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் அதிமுக பலிகடா ஆகும் எனவும் கூறினார்.

சென்னை திருவொற்றியூரில் திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில், பேசிய முதலமைச்சர், அதிமுக மற்றும் பாஜக மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தார். தொடர்ந்து பிரதமருக்கு நாட்டைப் பற்றி எந்த கவலையும் இல்லையென்றும், ஆனால் சதித் திட்டம் மூலம் அவர் அதிபராக முயற்சிப்பதாகவும் கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மேலும் ’ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆளும்கட்சியாக இருந்தபோது எதிர்த்த அதிமுக, இப்போது ஆதரிப்பது ஏன்’ என வினவினார். தாம் ஒரு பலிகடா என தெரியாமல் அதிமுக ஆதரவு தெரிவிப்பதாகவும் குற்றம்சாட்டினார். முதல்வர் பேசியவற்றின் விவரங்களை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவிலும் காணலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com