பேரறிஞர் அண்ணாவின் 48-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சரும், அமைச்சர்களும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவும் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து, பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் அதிமுக நிர்வாகிகள், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றும் மரியாதை செலுத்தினர்.