தமிழ்நாடு
நடுக்காட்டுப்பட்டியில் முதலமைச்சர் பழனிசாமி : சுஜித் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி
நடுக்காட்டுப்பட்டியில் முதலமைச்சர் பழனிசாமி : சுஜித் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி
ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித் புகைப்படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித் புகைப்படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார். நடுக்காட்டுப்பட்டுக்கு வருகை தந்துள்ள முதலமைச்சர், சுஜித் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள் உடன் இருந்தனர்.