சூடான் தீ விபத்து : பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

சூடான் தீ விபத்து : பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

சூடான் தீ விபத்து : பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
Published on

சூடான் தீ விபத்தில் காணாமல்போன மூன்று தமிழர்களின் நிலையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சூடானில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி காணாமல் போனவர்களில் மூன்று பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ராமகிருஷ்ணன், ராஜசேகர், வெங்கடாசலம் ஆகிய மூன்று பேர் தீவிபத்திற்குப் பின் காணாமல் போனதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இவர்களில் ராமகிருஷ்ணன் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதேபோல் விபத்தில் காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்குமார் என்பவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தைச் சேர்ந்த பூபாலன், முகமது சலீம் ஆகிய இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் பொது சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய இந்தியர்கள் குறித்த விவரத்தை அறிந்து கொள்ள சூடான் நாட்டின் கைபேசி எண்ணான +249-921917471-ல் தொடர்பு கொள்ளலாம் என்று தூதரகம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், சூடான் தீ விபத்தில் காணாமல் போன மூன்று தமிழர்களின் நிலையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். வெளியுறவுத்துறை மூலம் தமிழர்களின் நிலையை கண்டறிந்து, இந்திய தூதரகம் மூலம் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தீ விபத்தில் காயமடைந்த மூன்று தமிழர்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். 

இதற்கிடையே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள தகவலில், தீவிபத்து நடந்த குடோனில் 60 இந்தியர்கள் பணியாற்றி வருவதாகவும், விபத்து நடந்த போது 53 பேர் பணியில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com