தொழில் நிறுவனங்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை!!

தொழில் நிறுவனங்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை!!

தொழில் நிறுவனங்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை!!
Published on

தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளோடு முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்

கொரோனா பாதிப்பு காரணமாக தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. ஊரடங்கு 50 நாட்களை கடந்துவிட்ட நிலையில் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளோடு முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தொழில்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். ஊரடங்கு நேரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்தல், புதிய திட்டங்கள் என பல்வேறு விஷயங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com