அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஒருநாட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளமாக விளங்கிடும் கல்வியை இளம் தலைமுறையினருக்கு கற்பித்து, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க உதவிடும் ஆசிரியப் பெருமக்களின் சேவை மென்மேலும் சிறக்க முதலமைச்சர் வாழ்த்தியுள்ளார். கல்வி சிறந்த தமிழ்நாடு என்ற மகாகவி பாரதியாரின் கூற்றை மெய்பிக்கும் வகையில் அதிமுக அரசு கட்டணமில்லா கல்வி, விலையில்லா பேருந்து பயண அட்டை, மிதிவண்டி, சீருடைகள், பாட - நோட்டு புத்தகங்கள், மடிக்கணினி என கல்வி உபகரணங்களை வழங்கி மாணவர்களின் இடை நிற்றலைக் குறைத்து வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
காலி பணியிடங்களை நிரப்புதல், புதிய பாடத்திட்டங்கள் வடிவமைத்தல், ஐயங்களை போக்கிட கட்டணமில்லா உதவி மையம் போன்ற சீரிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மகத்தான பணி மேற்கொண்டு வரும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, கனவு ஆசிரியர் விருது வழங்கி கெளரவிக்கப்படுவதையும் முதலமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார்.