''அதிமுக உடையாது; ஒரு தொண்டரைக் கூட ஸ்டாலினால் தொட முடியாது'' - முதல்வர் பழனிசாமி

''அதிமுக உடையாது; ஒரு தொண்டரைக் கூட ஸ்டாலினால் தொட முடியாது'' - முதல்வர் பழனிசாமி

''அதிமுக உடையாது; ஒரு தொண்டரைக் கூட ஸ்டாலினால் தொட முடியாது'' - முதல்வர் பழனிசாமி
Published on

அதிமுகவை உடைக்க முடியாது என்றும், ஒரு தொண்டரைக் கூட ஸ்டாலினால் தொட முடியாது என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். பரப்புரை மட்டுமில்லாமல் அறிக்கைகள் மூலமாகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். நேற்று அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், அதிமுக இரண்டாக உடையும் எனத் தெரிவித்தார். இந்நிலையில் இன்று திருச்சியில் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, ஸ்டாலினின் அறிக்கைக்கு பதிலளித்தார்.

அதில், ''நாட்டுக்காக வாழ்ந்த தலைவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. அதனை ஸ்டாலின் உடைக்கப் பார்க்கிறார். அதிமுக உடைந்துவிடும் என அவர் சொல்கிறார். அதிமுகவை உடைக்க முடியாது. ஒரு தொண்டரைக் கூட ஸ்டாலினால் தொட முடியாது'' எனத் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com