அதிமுகவை தினகரன் குடும்பத்தினர் பாடாய்படுத்தியது அனைவருக்கும் தெரியும் - முதல்வர்

அதிமுகவை தினகரன் குடும்பத்தினர் பாடாய்படுத்தியது அனைவருக்கும் தெரியும் - முதல்வர்

அதிமுகவை தினகரன் குடும்பத்தினர் பாடாய்படுத்தியது அனைவருக்கும் தெரியும் - முதல்வர்
Published on

டிடிவி தினகரன் மற்றும் குடும்பத்தினர் அதிமுக கட்சியை எவ்வளவு பாடாய்படுத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்று முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, “நாடாளுமன்ற தேர்தலில் சரிவை சந்தித்தோம். மக்கள் நாடாளுமன்றம் சட்டமன்றம் என பிரித்து பார்த்து வாக்களிக்கின்றனர். மத்தியிலும் மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வர வேண்டுமென தீர்மானத்தில் தமிழக மக்கள் சிறப்பானவர்கள். குறுகிய காலத்தில் கூட்டணி அமைந்ததாலும் பிரச்சாரத்தில் சரியாக ஈடுபட முடியாததாலும் தான் சரிவு ஏற்பட்டது. 

என்னுடைய தந்தை திமுகவில் இருந்தவர். 74ல் முதன்முதலில் அதிமுக கொடி கம்பத்தை எனது கிராமத்தில் நட்டேன். உடனடியாக அதை பிடுங்கி எரிந்தனர். 

அன்று ஆரம்பித்த கொடி கம்ப பிரச்சனை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிமுகவை நேரடியாக எதிர்க்கும் தைரியம் ஸ்டாலினுக்கு இல்லை. அதனால் தான் அரசு ஊழியர்களை தூண்டிவிடுகிறார்.

கட்சியே துவங்காமல் சிலர் பேசுகின்றனர். யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை. டிடிவி தினகரன் மற்றும் குடும்பத்தினர் அதிமுக கட்சியை எவ்வளவு பாடாய்படுத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக அரசு யாருக்கும் அடிமை இல்லை” என்று கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com